உடல்நலம் குறித்து விசாரிக்கவே வந்தேன்: விஜயகாந்த் உடனான சந்திப்பு குறித்து ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 22 Feb, 2019 02:11 pm
no-politics-discussed-in-the-meeting-m-k-stalin

கருணாநிதி மீது அதிகபடியான பக்தி வைத்திருப்பவர் விஜயகாந்த் என்றும், அவரை மனிதாபிமான அடிப்படையில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிக்கவே சென்றதாகவும் விஜயகாந்தை சந்தித்த பிறகு மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தமிழக அரசியல் கட்சிகளுக்கு இடையே சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.  இதில் தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிரிகரித்துள்ளது. 

இதனிடையே தொடர்ந்து அரசியல் கட்சித்தலைவர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திராவிட முன்னேற்ற கட்சியின்  தலைவர் மு.க.ஸ்டாலின் விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் விஜயகாந்தை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது கூட்டணிக் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று கூறப்பட்டது.

சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், "நீண்ட நாட்களாக நானும் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் நண்பர்கள். அவரை விட நான் ஒரு வயது சிறியவன் என்றாலும் என்னை மரியாதையோடு அண்ணா என்று தான் அவர் அழைப்பார். 

கருணாநிதி மீது மிகுந்த பாசம் வைத்திருப்பவர் விஜயகாந்த். அதனை பக்தி என்று கூட கூறலாம். கருணாநிதி மறைந்த போது விஜயகாந்த் சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்காவுக்கு சென்றிருத்தார். அப்போது வீடியோ மூலம் தனது இரங்கல் தெரிவித்து பேசிய வீடியோ வருத்தம் தாங்க முடியாமல் சோகத்தில் அழுத காட்சியை இன்றும் நம் கண் முன் நிழலாடுகிறது. 

அமெரிக்காவில் இருந்து சிகிச்சை பெற்று வந்த பிறகு விமான நிலையத்தில் இருந்து நேரடியாக கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார். 

அவர் உடல்நலம் தேறி வருகிறது. விரைவில் முழு உடல்நலம் பெற்று நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் சேவை செய்ய வேண்டும். நான் அரசியல் பேச இங்கு வரவில்லை. மனிதாபிமான அடிப்படையில் உடல்நலம் குறித்து விசாரிக்கவே வந்தேன்" என்றார். 

இதனையடுத்து திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என்ற உங்கள் நல்ல எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்" என்று கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close