2019லும் பிரதமர் மோடி தான் ஆட்சிக்கு வருவார்: தம்பிதுரை

  Newstm Desk   | Last Modified : 23 Feb, 2019 05:29 pm
in-2019-also-modi-will-be-the-prime-minister-thambidurai

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் மோடி தான் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியப்பகுதியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேல் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, "ஒவ்வொரு கட்சிகளுக்கு என தனிக்கொள்கை இருக்கின்றது. தேர்தல் கூட்டணி என்பது வேறு. தேர்தல் கூட்டணிக்காகத்தான் சில கட்சிகள் ஒன்று சேர்வார்கள். தேர்தல் வரும் போது கூட்டணி அமைப்பது வழக்கம். அண்ணா – ராஜாஜியுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தார் என்பது நாம் அறிந்ததே.

நாங்கள் இந்த கூட்டணி அமைப்பதற்காக காரணம் தி.மு.க – காங்கிரஸ் வெற்றி பெறக்கூடாது என்பதற்காகத்தான். குடும்ப அரசியல் கட்சி நடத்துவர்கள் வெற்றி பெறுவது நாட்டிற்கு நல்லதல்ல என்பதற்காகத்தான் அதிமுக உருவாக்கப்பட்டது.

2004 ல் பாஜக, 2009 ல் பாமக வுடன் கூட்டணி வைத்தோம். அதுபோலத்தான் காலத்திற்கேற்ப கூட்டணி மாறும். நம் இனத்தையே அழித்த காங்கிரஸ் - தி.மு.க வரக்கூடாது என்பது தான் எங்கள் நோக்கம்.

தமிழக அரசை மத்திய அரசு வஞ்சித்தது உண்மை தான். இவ்வளவு காலம் எதிர்கட்சியாக இருந்ததால் தான் தமிழகத்திற்கான திட்டங்கள் பெற முடியாமல் இருந்ததாக தலைமை கருதுகிறது. போராடுவதன் காரணமாக மத்திய அரசு தமிழகத்திற்கு சிலவற்றை செய்துள்ளது. கஜா நிவாரணம் 15ஆயிரம் கோடியையும் தருவதற்கு பரிசீலனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே இந்த கூட்டணி அமைத்து மீண்டும் இந்த அரசு வரும்போதுதான் இந்த பலன்களை பெறமுடியும் என்பது தலைமை கழகத்தின் கருத்தாக இருக்கிறது. நாங்கள் எங்கள் உரிமைகளை கேட்டது உண்மைதான். அதில் தவறு கிடையாது. நான் இன்னும் அதை வலியுறுத்திதான் வருகிறேன். அதில் சமாதானம் கிடையாது. இப்போது இருக்கும் சூழ்நிலையில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வர இருக்கிறார். அவ்வாறு இருக்கையில் இந்த கூட்டணி அமைப்பதன் மூலமாகத்தான் தமிழகத்திற்கு வரவேண்டிய நிலுவைத்த்தொகையோ, காவிரி பிரச்சினையோ மற்றும் தமிழக உரிமைகள் பெறுவதற்கு வாயப்பு இருக்கிறது. வருகிற தேர்தலில் மோடி தான் மீண்டும் ஆட்சிக்கு வருவார்" என்றார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close