நாமும் பின்பற்றத்தக்க தோனியின் 10 மேற்கோள்கள்

  சாரா   | Last Modified : 25 Dec, 2019 08:27 pm

"என் நல்ல குணங்களில் ஒன்றுதான் தன்னம்பிக்கை. நான் எப்போதும் நம்பிக்கையுடனும் தீவிரத்துடனும் இருக்கவே விரும்புகிறேன். இதையே ஆடுகளத்திலும் பின்பற்றுகிறேன்."

"எனக்குள் அழுத்தம் ஏற்பட ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்."

"நண்பர்களுடன் ஊர் சுற்றுவதும், சாலையோர கடைகளில் உணவு அருந்துவதும் எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு!"

"நான் கிரிக்கெட்டை அதிகம் கற்கவில்லை. நான் கற்றவையும் பெற்றவையும் ஆடுகளத்தில் விளையாடியும், கொஞ்சம் விளையாட்டைப் பார்த்தும்தான்!"

"முடிந்தது முடிந்ததுதான். ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்யாமலிருக்க கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம்."

"மக்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்கிறார்கள், என்ன தேர்வு செய்கிறார்கள், எப்படி சிறந்தவற்றைப் பெறுகிறார்கள் என்பதை கவனிப்பதில் அக்கறை கொண்டுள்ளேன்."

"உங்களுக்கென கனவு இல்லையெனில் உந்துதலே கிடைக்காது; உங்கள் இலக்கும் தெரியாமலயே போய்விடும்."

"அந்தந்த நொடியில் வாழவே விரும்புகிறேன். கூடவே, என் வாழ்வைக் கொஞ்சம் அலசிப் பார்க்கிறேன்."

"வாழ்வின் கடினமான தருணங்களில் எது சரிவரும், எது சரிவராது என சட்டென யோசித்து, அனுபவ ரீதியில் உறுதியான முடிவெடுப்பதில் இருக்கிறது நம் கெத்து!"

"களத்திலோ வெளியிலோ சகாக்கள் ஒவ்வொருவருடனும் மனதார இயங்குவதே தலைமைக்கு அழகு!"

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close