சபாஷ் இந்தியா: விமானப்படைக்கு ரஜினி, கமல் பாராட்டு

  Newstm Desk   | Last Modified : 26 Feb, 2019 02:02 pm
rajini-and-kamal-tweets-about-airforce-strike

தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படையினர் தாக்குதல் நடத்தியதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு தக்க பதிலடி தரும் வகையில், இந்திய - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், தீவிரவாத முகாம்கள் மீது சக்தி வாய்ந்த குண்டுகள் வீசிப்பட்டன. அவை சுமார் 1,000 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை வீசியதில் தீவிரவாதிகளின் முகாம்கள் முற்றிலும் அழிந்தன. இதனையடுத்து இந்திய விமானப் படையினருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

 

 

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடித்திவிட்டு விமானப்படையினர் பத்திரமாக திரும்பி வந்துள்ளனர். இந்தியா தனது ஹீரோக்களை நினைத்து பெருமைப்படுகிறது. அவர்களுக்கு சல்யூட்" என்று பதிவிட்டுள்ளார். 

 

 

மேலும், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், சபாஷ் இந்தியா என் ட்வீட் செய்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close