வலிமை மிக்க நாடு என்பதை மோடி அரசு நிரூபித்துள்ளது: தம்பிதுரை

  Newstm Desk   | Last Modified : 27 Feb, 2019 10:46 am
a-powerful-country-has-proven

இந்தியா வலிமை மிக்க நாடு என்பதை பிரதமர் மோடி அரசு நிரூபித்துள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

கரூர் மாவட்டம் மேலப்பாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாஜகவுடனான கூட்டணி கொள்கைக்கான கூட்டணி அல்ல எனவும், பாஜகவை வளர்க்க அதிமுக கொள்கைகளை விட்டுதரவில்லை எனவும் கூறினார். மேலும், காங்- திமுக கூட்டணி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார். பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி இந்தியா வலிமை மிக்க நாடு என்பதை மோடி அரசு நிரூபித்துள்ளதாகவும் தம்பிதுரை தெரிவித்தார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close