பாம்பன் தூக்குப் பாலம் சீரமைப்பு: 84 நாட்களுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை

  Newstm Desk   | Last Modified : 27 Feb, 2019 11:15 am
the-pamban-bridge-aligned

பாம்பன் தூக்குப் பாலம் சீரமைக்கப்பட்டதையடுத்து 84 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் பழுது ஏற்பட்டதையடுத்து கடந்த 4ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டது. இதனால் ராமேஸ்வரம் ரயில்கள் அனைத்தும் மண்டபம் வரையே இயக்கப்பட்டது. அங்கிருந்து பயணிகள் பேருந்துகள் போன்ற மற்ற வாகனங்கள் மூலம் ராமேஸ்வரம் சென்றனர். 

இந்நிலையில், பாம்பன் தூக்குப்பாலத்தில் நடைபெற்ற சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து, 84 நாட்களுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளது. பயணிகள் ரயில்கள் வழக்கம் போல் ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படுகிறது. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close