ராணுவ வீரர் குடும்பத்திற்கு பணி ஆணை வழங்கினார் முதலமைச்சர்!

  Newstm Desk   | Last Modified : 27 Feb, 2019 12:38 pm
presented-to-appointment-order

ஜம்மு - காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று பணிநியமன ஆணைகளை வழங்கினார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலில் தமிழக வீரர்கள் இருவர் உட்பட 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் சிவசந்திரன், சிவ சுப்பிரமணியன் ஆகியோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும்,  ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் சிவச்சந்திரன், சிவ சுப்பிரமணியன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கான பணி நியமன ஆணையை அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close