கனவு உலகில் மிதக்கும் ஸ்டாலின்: ஜெயக்குமார் விமர்சனம்

  Newstm Desk   | Last Modified : 27 Feb, 2019 01:18 pm
stalin-floating-in-the-dream-world

திமுக அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடையும் என மு.க அழகிரி கூறியிருப்பது எதார்த்தத்தை உணர்த்துவதாகவும், ஆனால் ஸ்டாலின் கனவு உலகத்தில் மிதப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னை மாநில கல்லூரி ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,  தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், அதிமுகவின் கூட்டணி எக்ஸ்பிரஸ் வேகத்தில் தான் சென்றுகொண்டிருப்பதாகவும், தேமுதிகவுடனான பேச்சுவார்த்தையால் அந்த வேகம் குறையவில்லை எனவும் கூறினார். 

மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படுவதாகவும், முதலமைச்சர், துணை முதலமைச்சர் பல்வேறு ஆலோசனைகள் வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். ஜெயலலிதாவின் உயிருக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் இருந்ததால் அவரின் பாதுகாப்புக்கு  தனிவிமான வழங்கப்பட்டதாக கூறிய அவர், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும், அவரால் மற்றவர்களுக்கு தான் அச்சுறுத்தல் எனவும் விமர்சித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், திமுக அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடையும் என்று மு.க அழகிரி  கூறியிருப்பது,  எப்போதும் உண்மையை புரிந்துகொண்டு எதார்த்தமாக பேசுபவர் என்பதை காட்டுவதாகவும், ஆனால் ஸ்டாலின்  உண்மைக்கு மாறாக கனவு உலகத்தில் மிதப்பவர் என்றும் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close