ஹைதராபாத் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

  Newstm Desk   | Last Modified : 27 Feb, 2019 05:08 pm
hyderabad-special-train-advance-reservations-started

விடுமுறையையொட்டி கேரளாவில் இருந்து ஹைதராபாத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. 

பள்ளி, கல்லூரி விடுமுறையையொட்டி மே, ஜூன், ஜூலை மாதங்களில் கேரளாவில் இருந்து ஹைதராபாத்க்கு சிறப்பு கட்டண  ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன்படி, எர்ணாகுளத்தில் இருந்து ஹைதராபாத்துக்கு ரயில் எண் 07118, மே மாதம் 2,9,16,23,30 ஆகிய தேதிகளிலும், ஜூன் மாதம் 6,13,20,27 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு  கோவை, ஈரோடு சேலம், திருப்பதி, நெல்லூர் வழியாக  மறுநாள் இரவு 10.55க்கு ஹைதராபாத்தை சென்றடைகிறது. 

இதேபோல், கொச்சுவேலியில் இருந்து ஹைதராபாத்துக்கு ரயில் எண்.07116, மே மாதம் 6,13,20,27 ஆகிய தேதிகளிலும், ஜூன் மாதம் 3,10,17,24 மற்றும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதியும் இயக்கப்படுகிறது. கொச்சுவேலியில் இருந்து காலை 7.45க்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 2 மணிக்கு ஹைதராபாத்தை சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close