விவசாயிகள் நலனில் அக்கறை: பிரதமர் மாேடி பெருமிதம்

  Newstm Desk   | Last Modified : 01 Mar, 2019 04:06 pm
modi-speech-at-kanyakumari

கன்னியாகுமரியில், பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்து, மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய, பிரதமர் நரேந்தரி மாேடி, பொதுமக்கள் முன்னிலையில் மேலும் பேசியதாவது: 

ஏழை விவசாயிகளுக்கு உதவும் வகையில், அவர்களுக்கு ஆண்டுக்கு, 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு  செயல்படுத்தப்பட்டுள்ளது. 1.1 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் முதல் தவணை தொகையை, அவர்கள் வங்கிக் கணக்கில் பெற்றுள்ளனர். 

இம்மாதம் முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட திட்டம், இம்மாதம், 1ம் தேதியே நிறைவேற்றப்பட்டுவிட்டது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம், இவ்வளவு விரைவில் எப்போதாவது செயல்படுத்தப்பட்டுள்ளதா, அதை நாங்கள் செய்துள்ளோம். 

விவசாய கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பின் மூலம், காங்கிரஸ், விவசாயிகளை திசை திருப்ப நினைக்கிறது. கடன் தள்ளுபடியால், ஒரு சில விவசாயிகள் மட்டுமே பலன் அடைவர். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் வருடம் வருவது போல், கால்பந்தாட்டம் வருவது போல், 10 ஆண்டுக்கு ஒரு முறை, காங்., கட்சியின்  விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும். 

ஆனால், நாங்கள் அமல்படுத்தியுள்ள விவசாயிகள் நலன் நிதி அனைத்து விவசாயிகளுக்கும் பலன் தரும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

இதை மிஸ் பண்ணாதீங்க...

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close