மாேடி வரலாம், போகலாம்; நாடு நிரந்தரமானது: பிரதமர் உருக்கம் 

  Newstm Desk   | Last Modified : 01 Mar, 2019 05:34 pm
modi-will-come-and-go-but-the-nation-is-important-pm-speech-at-kanyakumari

கன்னியாகுமரியில், பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்து, மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய, பிரதமர் நரேந்தரி மாேடி, பொதுமக்கள் முன்னிலையில் மேலும் பேசியதாவது: 

முன்பொரு காலத்தில், காங்கிரஸ் செய்த தவறுகளை சுட்டிக் காட்டி அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்த தலைவர், ராஜாஜி. அவரும் தமிழகத்தை சேர்ந்தவரே. சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

முத்ரா வங்கி கடன் திட்டத்தின் மூலம், தொழில் துறை வளர்ச்சி அடைந்துள்ளது.

எதிர்க்கட்சியினருக்கு சமூக நீதியில் உடன்பாடு கிடையாது. அம்பேத்கரின் உருவப்படத்தை பார்லிமென்ட்டில் நிறுவியது, காங்கிரஸ் அல்லாத அரசு தான் என்பதை நினைவில் வைக்க வேண்டும். 

எஸ்.எடி., சட்டத்தில் மிகக் கடுமையான திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம், அந்த சமூக மக்களின் உரிமைகள் காக்கப்படும். 

எதிர்க்கட்சியினரால் ஒரு நல்ல தலைவரை உருவாக்க முடியவில்லை. எதிர்க்கட்சியினர் எவ்வித வெட்கமும் இல்லாமல் ஊழல் செய்தவர்கள். தி.மு.க., - காங்., கூட்டணியில், அமைச்சர் பதவியை பெற பெரும் பேரம் நடந்தது.

மந்திரிகளை தேர்வு செய்தது பிரதமர் அல்ல. பொதுவாழ்வில் இல்லாத சிலர், போன் மூலம் உத்தரவு பிறப்பித்தனர். இவர் தான் இந்த இலாகாவை பெற வேண்டும் எனவும் கட்டளையிட்டனர். அதன் படியே நடந்தது. 

குடும்ப அரசியல் நடத்தும் இந்த எதிர்க்கட்சிகளால் எப்போதும் இந்த நாட்டிற்கு நன்மை நடக்காது. இங்குள்ள, 125 கோடி  மக்களும் என் குடும்பத்தினர். இது தான் என் குடும்பம்.

இந்த நாட்டின் கடைக்கோடி குடிமகனும் தன் கனவை நிறைவேற்றிக் கொள்ள, அனைவரும் ஒன்று என்ற நிலைப்பாட்டை உருவாக்க, எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளியுங்கள்.

மோடி வரலாம், போகலாம். ஆனால் நாடு நிரந்தரமானது. உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக, நாட்டை பலவீனப்படுத்தாதீர்கள். 

இங்கு கூடிய அனைவருக்கும் நன்றி. பாரத் மாதா கீ ஜெய்.

இவ்வாறு அவர் பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close