தேர்தல் பிரச்சார வியூகம் எப்படியிருக்கும்?: சஸ்பென்ஸ் வைக்கும் பொன்னார்!

  Newstm Desk   | Last Modified : 04 Mar, 2019 01:59 pm
admk-bjp-alliance-will-be-finalised-soon-pon-radhakrishnan

புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும்; கூட்டணி பலத்தை பொறுத்து தேர்தல் பிரச்சார வியூகம் வகுக்கப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழகத்தில் அதிமுக கூட்டணி இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை. தேமுதிகவிடம் அதிமுக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அதிமுக - தேமுதிக இடையே பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வருகிற மார்ச் 6 -ஆம் தேதிக்குள் கூட்டணி இறுதி வடிவம் பெறும். 

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஐந்து தொகுதிகள் வழங்கப்பட்டதால், எந்த அதிருப்தியும் இல்லை. புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி பலத்தை பொறுத்து தேர்தல் பிரச்சார வியூகம் அமைக்கப்படும்" என்று தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close