விஜயகாந்தை சந்திக்கிறார் ஓபிஎஸ்!

  Newstm Desk   | Last Modified : 04 Mar, 2019 05:51 pm
ops-meets-vijayakanth

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்தை சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக ஓபிஎஸ், விஜயகாந்தின் வீட்டிற்கு செல்ல இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, மேலும், அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது குறித்து இதுவரை முடிவு எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close