இன்று தேமுதிக பொதுக்குழு கூட்டம்! கூட்டணி உறுதியாகுமா?

  Newstm Desk   | Last Modified : 05 Mar, 2019 09:37 am
dmdk-meeting-today

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றன. அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. 

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், விஜயகாந்தின் இல்லத்திற்கு நேற்று நேரடியாக  சென்று, அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். 

சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்ற இந்த சந்திப்பையடுத்து, ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அதிமுக - தேமுதிக கூட்டணி நாளை(மார்ச்.5) இறுதி செய்யப்படும். பிரதமர் மோடி கலந்துகொள்ளும் கூட்டத்தில் விஜயகாந்த் கண்டிப்பாக இடம் பெறுவார்" என்று கூறினார். 

அதேபோன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.

எனவே, அதிமுக - தேமுதிக கூட்டணி குறித்த இறுதி முடிவு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close