தமிழக அரசியலில் நாளை திருப்புமுனைக் கூட்டம்: தமிழிசை

  Newstm Desk   | Last Modified : 05 Mar, 2019 11:03 am
prime-minister-modi-s-participation-meeting-will-change-in-tamilnadu

பிரதமர் மோடி சென்னையில் நாளை பங்கேற்கும் பொதுக் கூட்டம், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் திருப்புமுனைக் கூட்டமாக இருக்கும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்து, கூட்டணி இறுதியானதும், தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகளின் விவரம் நாளை அறிவிக்கப்படும். தூத்துக்குடி தொகுதியில் பாஜக போட்டியிட வேண்டுமென கட்சித் தலைமைக் கேட்டுள்ளதாக தமிழிசை தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் நாளை பங்கேற்கும் பொதுக் கூட்டம், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறிய அவர், பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் என நம்புவதாகவும் கூறினார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close