விளையாட்டு துறையை உலகளவில் தரம் உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்

  Newstm Desk   | Last Modified : 05 Mar, 2019 03:31 pm
improve-quality-worldwide-in-sports-department

உலகத்தரத்திற்கு விளையாட்டு துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்க அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலை மற்றும் சான்றிதழ் வழங்குவதற்கென சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இணைந்து ஆட்சியை சிறப்பாக நடத்துவதாகவும், தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருவதாகவும் தெரிவித்தார். 

இளைஞர்களுக்காக மேலை நாடுகள், பல்வேறு மாநிலங்களில் இருந்து ரூ.3.03 கோடி அந்நிய முதலீடுகள் பெற்று வெற்றி வாகை சூடி உள்ளதாகவும், இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தொழிற்சாலைகள் தொடங்கி 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், இதற்காக 30 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டு அங்கு திறமை வாய்ந்த மாணவர்கள் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close