மார்ச் 11ல் திமுக எம்.எல்.ஏ, எம்.பிக்கள் கூட்டம்!

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 12:27 pm
dmk-meeting-will-be-held-on-march-11

திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வருகிற மார்ச் 11ம் தேதி நடைபெறும் என அக்கட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி, தமிழகத்தில் திமுக கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 

இதையடுத்து, திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்,வருகிற மார்ச் 11ம் தேதி நடைபெறும் என திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 11 அன்று காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெறும் என்றும் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திமுகவின் அறிக்கை:-

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close