தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்!

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 01:39 pm
minister-jayakumar-press-meet

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலில் எல்லோரையும் அரவணைத்து, ஒருமித்த கருத்தோடு செல்ல வேண்டும் என்ற நோக்கில் கூட்டணிக்கு அழைக்கிறோம். கூட்டணியில் சேர வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து அந்த கட்சி தான் முடிவு செய்யவும். 

தேமுதிகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. இன்னும் ஒரு சில தினங்களில் முடிவு சாதகமாக வெளியாகும் என்று நம்புகிறோம். அதிமுகவுடன் கூட்டணி குறித்து தேமுதிக தான் முடிவு செய்ய வேண்டும்.

தேமுதிகவுக்கு அதிமுகவில் கூட்டணிக்கான கதவுகள் இன்னும் மூடவில்லை. எப்போதும் திறந்தே தான் இருக்கும். டெல்லி செல்லும் விமானம் தயாராக இருக்கிறது. தேமுதிக போர்டிங் பாஸ் எடுத்தால் டெல்லி செல்லலாம். 

போயிங் விமானத்தில் ஏறிய அனைவர்க்கும் சீட் கொடுத்துவிட்டோம். விமானம் புறப்பட தயாராக உள்ளது. தேமுதிகவுக்காக காத்திருக்கிறோம். 

தேமுதிக கட்சி சார்பாக அதன் தலைவர்களில் ஒருவரான சுதீஷ், திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை திமுக வெளியில் சொல்லியிருக்க கூடாது. அவர்களுக்கு அரசியல் நாகரிகம் தெரியவில்லை. எனவே தான் வெளியில் சொல்லியிருக்கிறார்கள்" என்று அதிமுக தலைவர்களில் ஒருவரும் மற்றும் தமிழக அமைச்சர்களில் ஒருவரான ஜெயக்குமார், செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close