துரைமுருகனை தேர்தல் கூட்டணிக்காக சந்திக்கவில்லை: தேமுதிக உறுதி!

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 02:05 pm
dmdk-press-meet

தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காகவே திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்தோம், தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசவில்லை என தேமுதிகநிர்வாகி இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில், கட்சிகளிடையே நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், தேமுதிக மட்டும் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. அதிமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், நேற்று தேமுதிக நிர்வாகிகள் இளங்கோவன் மற்றும் முருகேசன் ஆகியோர் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேசினார்கள்.

இந்த சந்திப்பை அடுத்து, தேமுதிகவினர் தேர்தல் கூட்டணிக்காக தான் தன்னிடம் பேசியதாகவும், 'தொகுதி இல்லை' என்று தாங்கள் திருப்பி அனுப்பியதாகவும் துரைமுருகன் தெரிவித்தார். 

இந்நிலையில், இன்று தேமுதிக நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்திப்பில், "தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காகவே திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்தோம், தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசவில்லை. ஒரு கட்சியில் இருந்தால் மற்றொரு கட்சியினரை சந்திக்கக்கூடாது என்று ஏதேனும் இருக்கிறதா? எனவே நாங்கள் சொந்த காரணங்களுக்காக தான் துரைமுருகனை சந்தித்தோம். இதில் அரசியல் இல்லை" என்று கூறினர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close