முதலில் கூட்டணிக்காக பேசியது பாஜகவிடம் தான்: சுதீஷ் பேட்டி

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 02:05 pm
dmdk-press-meet

முதலில் நாங்கள், தேர்தல் கூட்டணி குறித்து பாஜகவுடன் தான் பேசினோம். அவர்கள், அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று கூறிவிட்டார்கள், பின்னர் தான் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது என தேமுதிகவின் சுதீஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று தேமுதிக நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் எல்.சுதீஷ் பேசுகையில், "நேற்று திமுக பொருளாளர் துரைமுருகனை எங்களது கட்சி நிர்வாகிகள் சொந்த வேலையாகவே சந்தித்துள்ளார்கள். ஆனால், பத்திரிகைகளிலும், மீடியாக்களிலும் இது தவறாக பரப்பப்பட்டுள்ளது. 

முதலில் நாங்கள், தேர்தல் கூட்டணி குறித்து பாஜகவுடன் தான் பேசினோம். அவர்கள், அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று கூறிவிட்டார்கள். எனவே அடுத்த சில நாட்களில் அதிமுகவுடன் கூட்டணி  குறித்து பேசினோம். நாங்கள் அதிமுகவுடன் பேசிய அடுத்த நாளே அதிமுக -பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அன்றைய தினம் எங்களுடனும் கையெழுத்து இட்டிருக்கலாமே என வருத்தம் இருந்தது. 

பின்னர் திமுகவிடம் இருந்து கூட்டணிக்காக அழைப்பு வந்தது. துரைமுருகன் என்னிடம் பேசினார். இருவரும் எப்போதுமே வழக்கமாக சந்தித்து பல விஷயங்கள் பற்றி பேசியுள்ளோம். அப்போது கூட்டணிக்காக துரைமுருகன் அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பு 10 நாட்களுக்கு முன்னதாக நடந்தது. நேற்று எங்களது நிர்வாகிகள் சென்று கூட்டணிக்காக பேசவில்லை. துரைமுருகன் தவறாக கூறுகிறார். துரைமுருகனுடன் நான் என்ன பேசினேன் என்று சொன்னால் திமுகவுக்கு தான் அசிங்கம். அவர், அவரது கட்சி மற்றும் தலைமை பற்றி எவ்வளவோ பேசியுள்ளார். இன்று கூட்டணிக்காக பேசினார்கள் என்று தவறாக கூறியுள்ளார். நாங்கள் அரசியல் நாகரிகம் அறிந்து செயல்படுகிறோம். எங்களது வளர்ப்பு அப்படி? அவர்களது வளர்ப்பு அப்படி? 

இன்னும் இரு தினங்களில் தேமுதிக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close