ஹோட்டல் சாம்பாரில் பல்லி... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி...!

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 04:15 pm
lizard-found-in-sambar-at-trichy-hotel-person-knocked-unconsious-stage

திருச்சியில் ஹோட்டல் ஒன்றில் பல்லி விழுந்த சாம்பாரை சாப்பிட்ட ஒருவர் மயக்கமுற்றார். 

திருச்சியில் தில்லை நகர் மக்கள் மன்றம் அருகில் ஸ்ரீ வாசவி ஓட்டல் உள்ளது. இங்கு நேற்று இரவு தயாரிக்கப்பட்ட சாம்பாரில் பல்லி விழுந்துள்ளது தெரிய வந்தது. அதனை சாப்பிட்ட பாலசுப்ரமணியன் என்பவர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். அவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். 

மயக்கமடைந்த பால சுப்பிரமணியன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று சிகிச்சை அளிக்கப்பட்டு முழு ஓய்வு எடுத்த பின் இன்று காலை டிஸ்சார்ஜ் ஆனார். 

பின்னர், இதுகுறித்து அவர், ஹோட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தில்லை நகர் போலீசில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

நேற்று முழுவதும் மயக்க நிலையில் இருந்ததால், இன்று காலை புகார் செய்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close