எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் இணைந்து நடித்த பழம்பெரும் நடிகை காலமானார்!

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 03:59 pm
actress-kusala-kumari-died-today

எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியுடன் இணைந்து நடித்த பழம்பெரும் நடிகை குசலகுமாரி இன்று உடல்நலக்குறைவு காராணமாக காலமானார். அவருக்கு வயது 83.

திரையுலக ஜாம்பவான்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகிய இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் 1954ம் ஆண்டு வெளியான 'கூண்டுக்கிளி'. இப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் பழம்பெரும் நடிகை T.D.குசலகுமாரி. மேலும், பராசக்தி, மன்மத லீலை, கொஞ்சும் சலங்கை, போன மச்சான் திரும்பி வந்தான், அரிச்சந்திரா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 250க்கும் மேற்பட்ட படங்களில் நடனமாடியுள்ளார். 

இந்நிலையில் இவர் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு ஒரு சுந்தரம் என்ற தம்பி உள்ளார். குசலகுமாரி திருமணம் செய்துகொள்ள வில்லை. தம்பியுடன் தான் வசித்து வந்துள்ளார். வறுமையில் வாடிய அவருக்கு தமிழக அரசின் சார்பில் மாதம் ரூ. 5,000 நிதியுதவி வழங்கி உத்தரவு பிறப்பித்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close