போலியோ வழக்கில் விஜய், அஜித், சூர்யா எதிர்மனுதாரர்களாக சேர்ப்பு!

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 06:05 pm
polio-camp-case-actors-vijay-ajith-surya-s-name-added-in-case

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமை முறையாக நடத்தக் கோரும் வழக்கில், நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா உள்ளிட்டோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரையை சேர்ந்த ஜான்சி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவரது மனுவில், "தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் முறையாக நடத்தப்படுவதில்லை. மேலும், அவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லை. எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையாக போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட வேண்டும், மக்களிடையே போலியோ குறித்த விழிப்புணர்வையும் அரசு ஏற்படுத்த வேண்டும்"  என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையில், தமிழக அரசு தரப்பில் 'போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழகத்தில் முறையாக தான் நடத்தப்பட்டு வருகின்றன. வருகிற 10-ஆம் தேதி கூட போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் நீதிபதிகள், "போலியோ சொட்டு மருந்து முகாம்கள் முறையாக நடத்தப்பட வேண்டும். அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நடிகர்கள் விஜய்,அஜித், சூர்யா, தென்னிந்திய நடிகர் சங்கம் செயலர் விஷால் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். நடிகர்கள் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள். எனவே, அவர்கள் மூலமாக இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்" என்று தெரிவித்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close