அ.தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரானது! ஓ.பி.எஸ்-இ.பி.எஸ்சிடம் ஒப்படைப்பு!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 11:31 am
election-report-submitted-in-ops-eps

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை ஓ.பி.எஸ்-இ.பி.எஸ்சிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பொன்னையன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு இந்த தேர்தல் அறிக்கையினை தயாரித்துள்ளனர். 

நாடாளுமன்றத் தேர்தல் தேதி குறித்து இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில், நாடு முழுவதும் உள்ள கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் ஆளும் அதிமுக, பாஜக மற்றும் பாமக கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. இதனிடையே, அதிமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அதிமுக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னையன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு தேர்தல் அறிக்கை தயாரிக்க நியமிக்கப்பட்டனர். 

அதையடுத்து, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், தேர்தல் அறிக்கையை கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரிடம் பொன்னையன் இன்று சமர்ப்பித்துள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close