டிடிவி தினகரன் மீதான வழக்கை விசாரிக்க மார்ச் 20ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 12:11 pm
ttv-dinakaran-s-case-hearing-at-delhi-court

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பான டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டு சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, மார்ச் 20ம் தேதி வரை  நீட்டிப்பு செய்து டெல்லி பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. முக்கியமாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மேலும், தேர்தல் ஆணையம் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. 

அப்போது இரட்டை இலை சின்னத்தை மீட்க, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில், டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இதையடுத்து, நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இரட்டை இலை  சின்னம் யாருக்கு ஒதுக்குவது? என்ற வழக்கின் விசாரணை நடைபெற்று வந்ததால், இரட்டை இலை சின்னம் லஞ்சம் தொடர்பான வழக்கின் விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் -இபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், குக்கர் சின்னத்தை வழங்கக்கோரிய வழக்கு மீதான  விசாரணை நடைபெறுவதால், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பான டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டு சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணையை மார்ச் 20ம் தேதி வரை தடை நீட்டிப்பு செய்து டெல்லி பட்டியாலா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close