தேமுதிக குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை: ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 12:40 pm
m-k-stalin-press-meet-in-arivalayam

கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தேமுதிக கூறுவது குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என திராவிட முன்னேற்ற கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தோழமை கட்சிகள் உடனான  கூட்டம் நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, "2019 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அதோடு 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வருமாயின் அதற்கும் சேர்த்து எம்.ஜி.ஆர் கழகம், திராவிட இயக்க தமிழர் கழகம் உட்பட பல கட்சிகள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

முன்னரே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இன்று இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற கட்சிகளுக்கு திமுக சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார். 

திமுகவுடன்  கூட்டணி பேச்சுவார்ததை நடத்தவில்லை என்று தேமுதிக தெரிவித்திருப்பது குறித்து பேச தான் தயாராக இல்லை என்று கூறிய ஸ்டாலின், "இதுகுறித்து எங்கள் கட்சியின் பொருளாளர் விளக்கமாக பேசிவிட்டார். நான் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை" என்றார். 

இதனையடுத்து அவரிடம் ரஃபேல் ஆவணங்கள் திருடுப்போனதாக மத்திய அரசு தெரிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், "ஆவணங்கைளையே பாதுகாக்க முடியாத மோடி தான் நாட்டை பாதுகாக்க போகிறேன் என கூறுகிறார். தேர்தல் ஸ்டண்ட்களை தற்போது மோடி செய்து வருகிறார்" என்றார். 

மேலும் பேசிய அவர், "திமுகவின் பிரச்சாரம் என்றோ தொடங்கிவிட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற வேண்டும். அது  தான் ஜனநாயகம். ஆனால் அதனை தடுக்க மோடியும், தமிழகத்தில் எடப்பாடி அரசும் திட்டம் தீட்டுவதாக தகவல்கள் வருகின்றன" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close