ஒரு வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 03:28 pm
tet-exam-notification-will-be-released-on-next-week-minister-sengottaiyan

ஒரு வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் இனி தேக்கநிலை இருக்காது. ஆசிரியர் பற்றாக்குறை வரும் ஆண்டுகளில் சரி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு தேதி, காலிப்பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் ஒரு வாரத்தில் வெளியாகும்.

இந்திய அளவில் தமிழகத்தில் கல்வியறிவு சதவீதம் உயர்ந்துள்ளது. மத்திய அரசின் திட்டமான 'அனைவருக்கும் கல்வி' திட்டத்தின் கீழ் அனைவருக்கும் கல்வி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close