விஜயகாந்துடன் ஸ்டாலின் அரசியல் பேசவில்லையா? - விளக்கம் கேட்கும் பிரேமலதா!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 02:06 pm
dmdk-premalatha-press-meet

"விஜயகாந்தை சந்தித்த போது அரசியல் பேசவில்லை என்று ஸ்டாலின் முதலில் விளக்கம் கொடுக்கட்டும், அதன்பின்னர் நான் விளக்கம் சொல்கிறேன்" என்று செய்தியாளரின் கேள்விக்கு, தேமுதிக பொருளாளர் பிரேமலதா பதில் அளித்தார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த பிரேமலதா, "கலைஞர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, அவரை சந்திக்க கேப்டனுக்கு அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், கேப்டனை பார்க்க, திமுக தலைவர் ஸ்டாலின் வந்தார். அவருக்கு அனுமதி அளித்தோம். கலைஞர் மீது எங்களுக்கு எப்போதுமே தனிப்பட்ட மரியாதை இருக்கிறது. 

தேமுதிகவை பழிவாங்கும் நோக்கில், திமுக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், ஸ்டாலின்- கேப்டன் சந்திப்பில், நான், 'இரு தலைவர்கள் சந்திக்கும் போது அரசியல் பேசத்தான் செய்வார்கள்?' என்று தான் கூறினேன். கூட்டணி பேச தான் வந்தார் என்று நான் சொன்னேனா? எது நாகரிகம் எது அநாகரிகம் என்பதை மீடியாக்களும் தெரிந்துகொள்ளுங்கள். 

விஜயகாந்துடன் ஸ்டாலின் அரசியல் பேசவில்லை என்று அவர் முதலில் விளக்கம் கொடுக்கட்டும், அதன்பின்னர் நான் விளக்கம் சொல்கிறேன். 

தேமுதிகவை எந்த கட்சியும் மிரட்டி பணிய வைக்க முடியாது. மேலும், எங்களுக்கு எப்போது தோணுகிறதோ அப்போது தான் விளக்கம் கொடுக்க முடியும். தேமுதிகவுக்கு கொள்கைகள் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? 2005ல் தேமுதிகவின் கொள்கைகள் குறித்து அறிவித்து விட்டோம். 

வீட்டில் திருமணம் ஆகும் வயதில் பெண் இருந்தால், பெண் கேட்டு வரத்தான் செய்வார்கள். தேர்தல் வந்தால் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு எல்லா கட்சிகளும் வரத்தான் செய்வார்கள். தேர்தல் கூட்டணி குறித்து கேப்டனின் முடிவு என்ன என்பதை விரைவில் அறிவிப்போம். 

எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தால் தமிழகத்திற்கு நல்லது என்று பார்த்து தான் கூட்டணி வைக்க முடியும். முன்னதாக ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி, நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகளில் ஜெயித்தது. தமிழகத்திற்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தது? 

மத்தியில் இருக்கும் ஒரு அரசுடன் கூட்டணி வைத்தால் தான், தமிழ் நாட்டிற்கு வேண்டியது கிடைக்கும். கூட்டணியில் என்னென்ன கோரிக்கைகளை முன்வைப்போம் என்று கூட்டணி உறுதியான பின்பு கூறுகிறோம்" என்று பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close