கே.சி.பழனிச்சாமி மீண்டும் அதிமுகவில் சேர்ப்பு!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 03:47 pm
aiadmk-kc-palanisamy-joined-again-in-party

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி., கே.சி.பழனிச்சாமி மீண்டும் அக்கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அதிமுக இரண்டாக பிரிந்த போது, முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமி. ஓபிஎஸ்-க்கு ஆதரவு அளித்தார். தொடர்ந்து ஓபிஎஸ் -இபிஎஸ் இணைந்த பின்னரும் அதிமுகவில் இருந்தார். 

பின்னர், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் அவரை அதிமுகவின் அடிப்படை கட்சி உறுப்பினர் உள்பட எல்லா பொறுப்புக்களில் இருந்தும் நீக்குவதாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் கடந்த 2018 மார்ச் 16ம் தேதி அறிக்கை வெளியிட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், மத்திய பாஜக அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளிக்கும் கே.சி.பழனிசாமி கூறியதையடுத்து, அவரை அதிமுக பதவி நீக்கம் செய்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. 

இந்த சூழ்நிலையில் சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு, கே.சி.பழனிச்சாமி மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படடுள்ளார். அவர்  ஓபிஎஸ் -இபிஎஸ் முன்னிலையில் இன்று அதிமுகவில் மீண்டும் இணைந்தார். 

newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close