காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, வளர்ச்சியை மையப்படுத்தி தயார் செய்யப்பட்டுள்ளது: கே.எஸ்.அழகிரி

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 04:08 pm
the-congress-party-s-election-statement-is-on-based-development

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை  வளர்ச்சியை மையப்படுத்தி தயார் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

மதுரையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகையையொட்டி, காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மாவட்ட  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "மார்ச் 13 ஆம் தேதி ராகுல்காந்தி தமிழகத்தில் முதல் பிரச்சார கூட்டதில் பங்கேற்க உள்ளார் என தெரிவித்தார். எங்கள் கூட்டணி மத சார்பற்ற கூட்டணி என்றும் அதிமுக சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் தெரிவித்த அவர் அதிமுக கூட்டணி மக்களின் நம்பிக்கையை பெற முடியாது என கூறினார். 

தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகம் வளர்ச்சி பெறும் எனவும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வளர்ச்சியை மையப்படுத்தி தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். காங்கிரஸ் - திமுக - மதிமுகவுக்கு கொள்கை மாறுபட்டு இருக்கலாம், ஆனால் மதசார்பற்ற நிலைப்பாட்டில் நாங்கள் ஒற்றுமையாக இருப்பதாக தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close