அபிநந்தனுக்கு 'பரம் வீர் சக்ரா' விருது: பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 05:05 pm
cm-writes-letter-to-pm-for-giving-param-vir-chakra-award-to-abhinandan

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், "கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது எனும் தீவிரவாத அமைப்பு, தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். 

இதற்கு பதிலடியாக, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயிற்சி முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டார். பின்னர் சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தத்தால் கடந்த 1ம் தேதி பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்டார்.

பாகிஸ்தானின் போர் விமானத்தை வீழ்த்திய அபிநந்தனின் வீர தீர செயல் நாடு முழுவதும் பலரது மனதை ஈர்த்தது. அவருக்கு இந்திய அரசின் உயரிய ராணுவ விருதான 'பரம்வீர் சக்ரா' விருது வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close