ஜெயலலிதா மரணம் அப்போலோவில் தான்; விசாரணை 90% நிறைவு: ஆறுமுகசாமி ஆணையம் தகவல்!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 05:44 pm
jayalalitha-s-death-investigation-by-aarumugasamy-commission

ஜெயலலிதாவின் மரணம் அப்போலோ மருத்துவமனையில் தான் நிகழ்ந்துள்ளது என்றும் அவரது மரணம் குறித்த விசாரணை 90% முடிவடைந்துள்ளது என்றும் ஆறுமுகசாமி ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

அப்போலோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. அப்போலோ அளித்த மனுவில், "ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் விசாரித்து வரும் ஆணையம், எங்களது தரப்பில் மருத்துவர்கள், ஆஜராகும்போது அவர்களின் பணி நேரத்தை கருத்தில் கொள்ளாமல் காக்க வைக்கின்றனர். மேலும், ஆணையமே திடீரென விசாரணையை ஒத்திவைக்கிறது. 

மேலும், எங்கள் தரப்பில் ஆஜராகும் மருத்துவர்களின் விளக்கத்தைப் புரிந்துகொள்ள 21 துறைகளைச் சார்ந்த மருத்துவர்களைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்த வழக்கில் 21 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. தொடர்ந்து இன்றைய விசாரணையில் ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில், "ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90% நிறைவடைந்துள்ளது. அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வதை தடுக்கவே அப்போலோ வழக்கு தொடர்ந்துள்ளது. ஜெயலலிதாவின் மரணம் நிகழ்ந்தது அப்போலோவில் தான். எனவே, அவர்களது தரப்பில் அதிகம் விசாரணை செய்ய வேண்டியது இருக்கும். விசாரணை முடிந்து அரசிடம் அறிக்கை அளிக்கும் முன்னரே ஒரு தலைப்பட்சமான விசாரணை என்று அப்போலோ கூறுவது சரியல்ல. எந்த காரணத்திற்காகவும் விசாரணையை நிறுத்த முடியாது" என்று வாதிடப்பட்டது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close