ஹோவர்கிராஃப்ட் கப்பலில் சென்னையை அடைந்த பெண் அதிகாரிகள் !

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 11:17 pm
lady-officers-reached-chennai-by-hovercraft

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலிருந்து நிலம் மற்றும் நீரில் செல்லக்கூடிய ஹோவர் கிராஃப்ட் கப்பல் காரைக்கால் வழியாக சென்னை கடற்கரையை நேற்று (வெள்ளிக்கிழமை) வந்தடைந்தது.  நிலம் மற்று நீரில் செல்லக்கூடிய ஹோவர் கிராஃப்ட், 79 ஏசிவி என்ற எண் கொண்டது. இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான இந்த கப்பல், நிலம் மற்றும் நீரில் செல்லக்கூடியது.  இந்த கப்பலில் பயணம் செய்தவாறு கடற்படை வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவர். 

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கப்பற்படை பெண் அதிகாரிகள் அனுராதா சுக்லா மற்றும் ஷிரின் சந்திரன் ஆகியோர் ஹோவர்கிராஃப்ட் கப்பலில் நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னை வந்தடைந்தனர்.  இவர்கள் கடந்த 6ஆம் தேதி ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் பகுதியில் இருந்து தங்கள் கண்காணிப்பு பயணத்தை தொடங்கினர். மன்னார் வளைகுடா மற்றும் பால்க் பே பகுதியின் முக்கிய நகரங்களைக் கடந்து, காரைக்கால் வழியாக சென்னை கடற்கரையை அடைந்தனர்.

2017ஆம் ஆண்டு ஹோவர்கிராஃப்ட்டில் பயிற்சி பெற்ற நான்கு பெண்களில், அனுராதா மற்றும் ஷிரின் ஆகியோரும் அடங்குவர். இந்திய கப்பற்படையின் கிழக்கு பிராந்தியத்தினுடைய முதல் கப்பற்படை கேப்டன் அனுராதா என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சென்னை வந்தடைந்த பெண் அதிகாரிகள் அனுராதா சுக்லா மற்றும் ஷிரின் சந்திரன் ஆகியோருக்கு கப்பற்படை உயர் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்து பாராட்டைத் தெரிவித்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close