திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் தொடங்கியது

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 12:30 pm
the-interview-for-dmk-candidates-began

இடைத்தேர்தலில் திமுக சார்பில்  போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை, மக்களவை தேர்தலோடு சேர்த்து நடத்த வேண்டும் என பல கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இடைத்தேர்தலுக்கான கட்சி பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்பமனு பெறப்பட்டது. 

இந்நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் முன்னிலையில் இந்த நேர்காணல் நடைபெற்று வருகிறது. நேர்காணல் முடிந்தவுடன் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close