ரகசியத்தை வெளியிடுவது திமுகவின் வாடிக்கை: தம்பிதுரை

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 10:40 am
dmk-is-the-client-on-releasing-of-the-secret

ரகசியத்தை காப்பாற்ற முடியாத திமுக கட்சியால் நாட்டை எப்படி காப்பாற்ற முடியும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார். 

கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, " தேமுதிக கூட்டணி அமைப்பது தொடர்பாக பேசியிருந்தாலும், அந்த ரகசியத்தை வெளியிட்டிருக்க கூடாது. ரகசியத்தை வெளியிடுவது திமுகவின் வாடிக்கையாக உள்ளது. இலங்கை போரின் போதும் திமுக ரகசியத்தை வெளியிட்டது. ரகசியத்தை காப்பாற்ற முடியாத திமுகவால் நாட்டை எப்படி காப்பாற்ற முடியும். சந்திர சேகர் பிரதமராக இருந்த போது ரகசியத்தை வெளியிட்டதால் தான் திமுக ஆட்சியை இழந்தது" என கூறினார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close