தலைமைச் செயலகத்தை கட்சி அலுவலகமாக பயன்படுத்திய இபிஎஸ் -ஓபிஎஸ்: திமுகவின் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 12:02 pm
rs-bharathi-writes-letter-to-governor-for-taking-action-against-eps-ops

அரசு தலைமைச் செயலகத்தை அரசியல் கட்சி நிலையமாக மாற்றிய முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி மீண்டும் ஓபிஎஸ்- இபிஎஸ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். கே.சி.பழனிச்சாமி அதிமுகவில் இணையும் இந்த நிகழ்வு நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. 

இந்நிலையில்,  திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, ஆளுநருக்கு இதுகுறித்து ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்கும் ஒருவர், அவர் பணியாற்றும் அரசின் தலைமைச் செயலகத்தை, அரசுப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்பது விதிமுறை.

ஆனால்,முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டத்தை மீறியுள்ளார். விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளார். இதற்கு ஓபிஎஸ்-ம் துணை போயுள்ளார். கே.சி.பழனிசாமியை அதிமுகவில் இணைக்கும் செயலை ஓபிஎஸ் -இபிஎஸ் தலைமை செயலகத்தில் நடத்தியுள்ளனர். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துளளனர். சென்னை தலைமை செயலகத்தை கட்சிப் பணிக்கு பயன்படுத்திய முதல்வர், துணை முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். 

முன்னதாக, துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமை செயலகத்தில் உள்ள தனது அறையில் யாருக்கும் தெரியாமல் அதிகாலையில் ஹோமம் நடத்தியதாக கூறப்பட்டது எதிர்கட்சிகளிடையே விமர்சனத்திற்குள்ளானது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close