சென்னை விமான நிலையத்தில் 86வது முறையாக கண்ணாடி விழுந்து விபத்து!

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 11:59 am
chennai-airport-glass-broken

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனைய நிலையத்தில் இன்று 86வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்தது. 

சென்னை விமான நிலையத்தில், அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மேற்கூரை இடிந்து விழுவது தற்போது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. கண்ணாடி உடைந்து விழும் எண்ணிக்கை, சதத்தையும் தொட்டு விடும் நிலையில் உள்ளது.

இந்நிலையில், இன்று 86வது முறையாக விமான நிலைய மேற்கூரை கண்ணாடி உடைந்து விழுந்துள்ளது. உள்நாட்டு விமான நிலைய முனையத்தில் பயணிகள் வரும் 4வது நுழைவு வாயிலில் கண்ணாடி உடைந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close