கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது: எஸ்.பி.வேலுமணி

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 12:33 pm
growth-in-over-the-past-50-years-has-been-done-sp-velumani

கோவையில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி பணியை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். 

நாடு முழுவது தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவையிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில், கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ரூ.224.10 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 

அப்போது பேசிய அமைச்சர் எஸ்.பி, வேலுமணி, கோவையில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி பணியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொண்டு வருவதாகவும், இதேபோல், மற்ற மாநகராட்சி பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.  

இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூன், கனகராஜ், பி.ஆர்.ஜி. அருண்குமார் மற்றும் வி.சி. ஆறுக்குட்டி உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close