காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் விரைவில் அறிவிப்பு! - கே.எஸ்.அழகிரி

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 12:52 pm
dmk-congress-alliance-discussion-today

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றுதமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளது என்று திமுகவுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் கே.எஸ்.அழகிரி, தங்கபாலு, கே.ஆர்.ராமசாமி ஆகியோர் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேசினர். 

இந்த பேச்சுவாரத்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

நாங்கள் விரும்பும் தொகுதிகளை திமுகவிடம் கூறியிருக்கிறோம். மற்ற கட்சிகளுடன் அவர்கள் கலந்துபேசி முடிவை அறிவிப்பர்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close