கூட்டணியை உடைக்க சதி வேலைகளில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள்! - முதல்வர் எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 02:29 pm
cm-edappadi-palanisamy-speech-at-salem-admk-meeting

அதிமுக தலைமையிலான கூட்டணியை உடைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளன. எனவே, அதிமுகவினர் மற்றும் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று அதிமுக நிர்வாகிகள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். 

அப்போது அவர், "அதிமுக தலைமையிலான கூட்டணியை பார்த்து திமுகவினர் மிரண்டு போயுள்ளனர். எனவே இந்த கூட்டணியை உடைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளன. எனவே அதிமுகவினர் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். பாலில் சிறிதளவு விஷம் கலந்தாலும் பால் கெட்டுவிடும். எனவே தொண்டர்கள் மிகவும் கவனத்துடன் தேர்தலை சந்திக்க வேண்டும். 

தமிழகமும் சரி, கட்சியும் சரி இரண்டுமீ வார்ச்சி பெற வேண்டும் என்று தான் இந்த கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. வருகிற தேர்தலில் வெற்றி பெறுவோருக்கு எதிர்காலம் அமோகமாக இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, ஒரு மாத காலமே அவகாசம் இருக்கும். இந்த நேரத்தில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு பணியாற்றி வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெற வேண்டும். அதிமுகவினருடன் கூட்டணி கட்சியினரும் முழு ஒத்துழைப்பு அளித்து தேர்தலை சந்தித்து அதிகபடியான வாக்குகளை வெற்றி பெற வேண்டும். 

அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளன. வரும் தேர்தல்களிலும் இந்த கூட்டணி தொடரும்" என்று பேசியுள்ளார். 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close