நாட்டை பாதுகாக்க மோடி தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும்: முதல்வர் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 02:52 pm
cm-edappadi-palanisamy-press-meet

திறமைமிக்க, வலிமைமிக்க, அனுபவம் வாய்ந்த ஒரு தலைவர் தான் நாட்டுக்கு தேவை. அந்த வகையில் நாட்டின் பாதுகாப்புக்கு மோடி தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று அதிமுக நிர்வாகிகள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேமுதிகவுடன் எந்தவித இழுபறியும் இல்லை. ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு நிலைப்பாடு கொண்டுள்ளனர். தேமுதிகவும் அப்படி தான்.  

சேலத்தில் குடிநீர் பிரச்சனை குறித்து விவாதிக்கவே இங்கு வந்தேன். வந்த இடத்தில் அதிமுக -பாமக உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய நிலைமை. சேலத்தில் உள்ள பாமக உறுப்பினர்கள் என்னை வந்து சந்தித்தனர். 

வரப்போகும் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல். இந்தியா ஜனநாயக நாடு. சுமார் 130 கோடி மக்கள் இருக்கிறார்கள். திறமைமிக்க, வலிமைமிக்க, அனுபவம் வாய்ந்த ஒரு தலைவர் தான் நாட்டுக்கு தேவை. அந்த பதவிக்கு பொருத்தமானவர். நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். எனவே பிரதமர் மோடி தான் நாட்டுக்கு தேவை. 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் எங்களது அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்படுகிறோம். பேரறிவாளனை பரோலில் விடுவித்தது அதிமுக அரசு தான். எனவே அவர்களை விடுவிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்" என்று பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close