பிரேமலதாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 02:49 pm
minister-jayakumar-s-advice-to-premalatha

தேமுதிக கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசியதை தவிர்த்திருக்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னை தரமணியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " அதிமுக ஆட்சி இன்று வரை தொடர தேமுதிக தான் காரணம் என்ற பிரேமலதா விஜயகாந்தின் கூற்றிற்கு, தேமுதிகவை உயர்த்தி பிடிக்க அவர் எந்த கருத்தை வேண்டுமானாலும் கூறலாம் எனவும், திமுகவைதான் பிரேமலதா தில்லுமுல்லு கட்சி என சொன்னாரே தவிர அதிமுகவை அல்ல என கூறினார். 

37 எம்.பிக்களால் தமிழகத்திற்கு நன்மை இல்லை என்ற பிரேமலதாவின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, " 37 எம்.பிக்களால்தான் மேகதாது விவகாரத்தில் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க செய்ய முடிந்தது எனவும், மத்தியில் பங்கு பெற்றால்தான் மாநில உரிமை பாதுகாக்கப்படும் என்ற நிலைமை இல்லை; மத்தியில் பங்கு இல்லை என்றாலும் கூட எங்கள் உரிமையை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என தெரிவித்தார். 

பத்திரிக்கையாளர்களை பிரேமலதா ஒருமையில் பேசியது அதிமுக கூட்டணிக்கு பலவீனமாக இருக்காதா என்ற கேள்விக்கு, "பத்திரிக்கையாளர்களை அதிகம் நேசிக்கும் கட்சி அதிமுகதான்; நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதைதான் பத்திரிக்கையாளர்கள் பார்க்க வேண்டும் கூட்டணி பற்றி பார்க்க கூடாது என கூறினார். 

தேமுதிக மீது மென்மையான போக்கை கடைபிடிப்பது ஏன்? என்ற கேள்விக்கு.. "யார் தவறு செய்தாலும் கடுமையாக கண்டனம் தெரிவிப்பேன் ஆனால் சில சமயங்களில் அண்ணாவின் கோட்பாடான மறப்போம் மன்னிப்போம் என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும்; நேற்று பிரேமலதா ஒருமையில் பேசியதை முழுமையாக தவிர்த்து இருக்கலாம் என கூறினார்.

மேலும், தேமுதிக உடனான கூட்டணி இன்று அல்லது நாளை முடிவடையும். தேர்தல் அறிவிப்பு இன்னும் வரவில்லை; எனவே இன்னும் கூட்டணிக்கு நேரம் இருக்கிறது; எங்களை பொறுத்தவரை முடிவெடுக்க வேண்டியவர்கள் தேமுதிகவினர் தான் எ ன குறிப்பிட்டார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close