சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் போதே தீப்பற்றி எரிந்த பைக்! ஒருவர் பலி

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 04:48 pm
bike-fired-while-in-driving-one-dead

சென்னை தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பைக் திடீரென  தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். 

சாலை விபத்து தற்போது அதிகரித்து வரும் நிலையில் இன்று சென்னையில், சாலையில் சென்று கொண்டிருந்த பைக் ஒன்று எரிந்தது. தாம்பரம்- மதுரவாயல் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் சென்றுகொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சாலையில் சென்றுகொண்டிருக்கும் போதே, வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், வாகனத்தை ஓட்டிய நபர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். மற்றொரு நபர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தற்போது இந்த விபத்து குறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்துகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close