தமிழகம் முழுவதும் இன்று போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்!

  டேவிட்   | Last Modified : 10 Mar, 2019 08:51 am
polio-drops-camp-n-tamilnadu

சென்னையில் போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். 

தமிழகம் முழுவதும் இன்று போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், மீண்டும் இன்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து மாநகராட்சி நகர் நல மையங்கள், மருந்தகங்கள், சத்துணவுக் கூடங்கள் மற்றும் மாநகராட்சிப் பகுதியிலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ நோய்த் தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 43,051 முகாம்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன. 

வெளி மாநிலங்களிலிருந்து வரும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் வகையில், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் மற்றும் நடமாடும் ஊர்திகள் ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.   எனவே, அனைத்து பொதுமக்களும் தங்களின் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், எந்தவிதமான நோய் வாய்ப்பட்டிருந்தாலும், அதனைக் கருத்தில் கொள்ளாமல், தவறாமல் அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ நோய்த் தடுப்பு சொட்டு மருந்து வழங்கி, ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அந்தந்த மாநகராட்சியால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close