நல்லவர்களுடன் தான் கூட்டணி என்றதும் யாரும் வரவில்லை: கமல்ஹாசன்

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 01:19 pm
kamalhassan-about-allaince

நல்லவர்களுடன் தான் கூட்டணி என்று நாங்கள் தெரிவித்திருந்தோம், அதிலிருந்து எங்களிடம் யாரும் வரவில்லை என்று ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். 

மேலும் அவர் பேசும் போது, "நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து அமைச்சர் ஒருவர் பேசியுள்ளார், தற்போது சென்ட்டிரல் ரயில் நிலையத்திற்கு நடிகர் ஒருவரின் பெயரை வைக்கப்போகிறார்கள், அந்த நடிகரையும் சேர்த்து தான் பேசுகிறாரா என்று தெரியவில்லை. அவர் தேர்தல் பதட்டத்தில் இவ்வாறு பேசுகிறார். 

நாங்கள் நல்லவர்களுடன் தான் கூட்டணி என்று அறிவித்தோம். அப்போதிலிருந்தே எங்களுடன் கூட்டணி வைக்க யாரும் வரவில்லை. எங்களுடைய கூட்டணி பலமாக இருக்கிறது. மக்களுடன் தான் எங்கள் கூட்டணி. மக்களாட்சி வரும் போது மக்களுடன் கூட்டணி வைப்பது தானே சரி. வாக்குறுதி புத்தகம் தயாராகி வருகிறது. 

டார்ச் லைட் ஒளி வீச வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை" என்றார். 

மேலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள எழுவர் விடுதலை குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதுகுறித்து கமல் பேசும் போது, "சட்டம் என்று ஒன்று இருக்கிறது. அதைப்பற்றி நாம் பேச முடியாது. ஆனால் கருணையின் அடிப்படையில் இதுகுறித்து முடிவு எடுக்கலாம். 7 பேர் விடுதலை குறித்து நாம் பேசுகிறோம். ஆனால் ஏழரை கோடி பேரின் விடுதலை தான் இப்போது முக்கியம்" என்றார். 

அவர் தொடர்ந்து பேசும் போது, "பூரண மதுவிலக்கு குறித்து நான் முன்னரே பேசி இருக்கிறேன். இது சாத்தியமா என்பதற்கு உலக சரித்திரமே ஒரு உதராணம். அவ்வாறு பூரண மதுவிலக்கு கொண்டுவரப்பட்டால் தற்போது கோட்டையை ஆள்பவர்கள் முழுவதுமாக அந்த வியாபாரத்திற்கு போய்விடுவார்கள். எனவே மது அருந்துவது கெட்ட பழக்கம் என்ற முடிவை மக்கள் தான் எடுக்க வேண்டும்" என்றார்.

சட்டமன்ற இடைத்தேர்தலில் ரஜினி போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்திருக்கம் நிலையில் மக்கள் நீதி மய்யம் அவரிடம் ஆதரவு கோருமா என்ற கேள்விக்கு பதில் அளித்த கமல், "ஆதரவு கேட்பதை விட, கொடுப்பது தான் சரியாக இருக்கும். அதுவும் கேட்காமல் கொடுப்பது பெரிய விஷயம். அவர் கொடுப்பார் என்று நம்புகிறேன். 21 தொகுதிக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும். நானும் போட்டியிவேன். எந்த தொகுதி என்பதுகுறித்து பின்னர் அறிவிக்கிறேன்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close