திட்டங்களுக்கு வாக்கா? திட்டுபவர்களுக்கு வாக்கா? தமிழிசை

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 07:09 pm
voting-for-good-projects-tamilisai

மத்தியில் தாமரை மலர வேண்டும், தமிழகத்தில் இரட்டை இலை வலுப்பெற வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

மக்களவை மற்றும் இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை, பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்கனவே தேர்தல் களத்தில் இறங்கி விட்டதாகவும், மத்தியில் தாமரை மலர வேண்டும் தமிழகத்தில் இரட்டை இலை வலுப்பெற வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் எனவும் தெரிவித்தார். 

அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் பல்வேறு நலத் திட்டப்பணிகளை செய்து வருவதாகவும், இதுவரை செய்துள்ள நல்ல திட்டங்களை வைத்தே நாங்கள் வாக்குபெற உள்ளதாகவும் தெரிவித்த அவர், எதிர் கட்சிகள் திட்டுவதையே வாடிக்கையாக கொண்டிருப்பதாக கூறினார்.  மேலும், திட்டங்களுக்கு வாக்கா ? திட்டுபவர்களுக்கு வாக்கா? என பார்க்கும் போது திட்டங்களே வெற்றி பெறும் எனவும் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close