3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கிடையாது: தமிழக தேர்தல் ஆணையர்

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 07:25 pm
18-assembly-seats-to-go-on-elections-tamilnadu-election-commissioner

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில், 21 சட்டமன்ற தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறாது, என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க செய்யப்பட்டிருந்த தொகுதிகளுக்கான இடைத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, இதுகுறித்து பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படாது என்று அவர் கூறினார். 

3 தொகுதிகளிலும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், தேர்தல் நடத்தப்படாது என்று கூறினார். மற்ற 18 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று கூறினார். இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் மாதம் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை, மே 23ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்ததை போல, தேர்தல் நடத்தை விதிமுறைகள், உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அது தொடர்பாக அணைத்து மாவட்ட காவல்துறை ஆணையர்கள் மற்றும் எஸ்.பி-களுக்கு தெரியப்படுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close