அதிமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக!

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 08:37 pm
dmdk-joins-admk-alliance-gets-4-seats

அதிமுக தலைமையிலான அதிமுக, பாஜக, பாமக கூட்டணியில், தேமுதிக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நீண்ட நாட்களாக அதிமுக, பாஜக, பாமக கூட்டணியில் சேருவதற்காக தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்க கட்சித் தலைவர் விஜயகாந்த் விரும்புவதாக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்தார். அதற்கான பேச்சுவார்த்தை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அதிமுக தரப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் இரண்டு தரப்புக்கும் இடையே கூட்டணிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close