விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்: உச்ச நீதிமன்றத்தை நாட திமுக முடிவு

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 11:13 am
dmk-decided-to-file-a-case-against-3-areas

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி,ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து உச்ச நீதிமன்றத்தை நாட திமுக முடிவு செய்துள்ளது. 

17வது நாடாளுமன்றத்துக்கான மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது எனவும், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன், காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் என இரண்டுமே ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 

இந்த நிலையில், 21 சட்டமன்ற தொகுதிகளில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார். மேற்குறிப்பிட்ட இந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தற்போது இடைத்தேர்தல் நடத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, தற்போது விடுபட்ட அந்த 3 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படாதது குறித்து உச்ச நீதிமன்றத்தை நாட திமுக முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக திமுக, உச்ச நீதிமன்றத்தில் முறையிடும் என்று தெரிகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close