மதுரை தொகுதிக்கான தேர்தலை ஒத்திவைக்கக் கோரி முறையீடு!

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 11:32 am
election-should-be-postponed-in-madurai-constituency-public

சித்திரை திருவிழாவையொட்டி , மதுரையில் மக்களவைத் தேர்தலை தள்ளி வைக்க கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது எனவும், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன், காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் என இரண்டுமே ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 

மேலும், 21 சட்டமன்ற தொகுதிகளில், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சூழ்நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள அதே நாளில் மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறவிருப்பதால், அதில் கலந்து கொள்வதிலேயே மதுரை மாவட்டம் மற்றும் அதைச் சுற்றி அமைந்துள்ள ஏனைய மாவட்டத்தில் வாழ்ந்து வரும் லட்சக்கணக்கானள பொது மக்கள் விருப்பப்படுவர்.

அதை நாம் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாளில் நேரடியாகக் காண முடியும். எனவே பொதுமக்களின் வாழ்வின் ஓர் அம்சமாகத் திகழந்து வரும் சித்திரைத் திருவிழா நாளில் நடைபெற உள்ள தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை தர தமிழக தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், சித்திரை திருவிழாவையொட்டி மதுரையில் மக்களவைத் தேர்தலை தள்ளி வைக்க கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்,  கோரிக்கையை மனுவாகத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. 

இன்று மனுவாக தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் நாளை மனு விசரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close